மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 15 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
அதன்படி, தமிழகத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’என்ற பெயரில் மாநில நல்லாசிரியர் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அனைத்து விதமான பள்ளிகளில் பணிபுரிந்த 379 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 389 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதன் அடையாளமாக சென்னை மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் 15 பேருக்கு மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதன்மைச் செயலர் காகர்லா ஷாஉள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வழக்கமாக மாநில நல்லாசிரியர் விருது சான்றிதழில் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ஆனால், நடப்பாண்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் சான்றுகளில் முதல்வரின் புகைப்படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.