தமிழகத்தில் கரோனா பரவல் சற்று தணிந்துள்ளதால் செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே பள்ளி வேலை நேரம் மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆனால், கல்வித்துறை சார்பில் முறையான அறிவிப்பு வெளியாகாததால் பள்ளி முடியும் நேரம் குறித்து தலைமையாசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அமைச்சரின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. சென்னை உட்பட நகர்புறங்களில் இயங்கும் பள்ளிகள் காலை 8.30 முதல் மாலை 3.30 மணி வரைஇயங்க வேண்டும். இதரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்பட வேண்டும்.
இந்த கருத்தைத்தான் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, தங்கள் பகுதியின் சூழலுக்கேற்ப பள்ளியின் வேலை நேரத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் ஒப்புதலுடன் தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்’’ என்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.