1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

*பத்தே நாட்களில் தொப்பையைக் குறைக்க உதவும் ஜப்பானின் 'டவல்' உடற்பயிற்சி..!*

🙏💱 *பத்தே நாட்களில் தொப்பையைக் குறைக்க உதவும் ஜப்பானின் 'டவல்' உடற்பயிற்சி..!* 💚❤️

இன்றைய சூழலில், மக்கள் பகட்டான உடைகளை அணிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் பெரும்பாலும் பலரும் தொப்பையை வைத்திருக்கிறார்கள். இதற்கு பாரம்பரியம், சரியான தூக்கமின்மை, ஒழுங்கற்ற உணவு முறைகள் எனப்பல காரணங்கள் கூறப்பட்டாலும், பலரும் உடற்பயிற்சியினால் இதைக் குறைக்கவே பாடுபடுகிறோம். இப்படிப்பட்டவர்களுக்காக ஜப்பானியர்கள் இந்த தொப்பையைக் குறைக்கும் 'டவல்' உடற்பயிற்சியை அறிமுகம் செய்கிறார்கள்.


உண்மையில் இந்த உடற்பயிற்சியினால் தொப்பைக் குறையுமா?

தொப்பையில்லாத மெலிந்த உடல் அமைப்பை யார்தான் விரும்ப மாட்டார்கள்?. ஆனால் இதற்காக உடற்பயிற்சிக் கூடங்களில் பலமணி நேரம் வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்யவேண்டி இருக்கிறதே, அதுதான் பெரும்பாடு.ஆயினும் தொப்பையிலுள்ள கொழுப்பை அவ்வளவு எளிதாக கரைக்க முடிவதில்லை. வாக்கிங், ஜாகிங், சிட்அப்ஸ் இப்படி ஓயாமல் தினந்தோறும் உடற்பயிற்சிகளை செய்தாலும், இடுப்பு மற்றும் வயிற்றுசதையின் சிறுபகுதியை குறைக்கவும் மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது. இந்நிலையில், 'இந்த உடற்பயிற்சி 10 நாட்களில் உங்களின் தொப்பையை குறைக்கும்' என யாராவது சொன்னால் அதை நாம் நம்புவோமா?

ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அண்மையில் @tiabagha என்ற யூஸர் அவரின் சமூக வலைத்தளங்களில், வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தினம் 5 நிமிடம் செய்யும் ஜப்பானின் 'டவல்' உடற்பயிற்சியினால், பத்தே நாட்களில் தொப்பை குறையும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவை 2.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக ஊடகங்களில் லைக் செய்தும் மற்றும் கமெண்ட் செய்தும் இருக்கிறார்கள். அவர் சொல்வது சாத்தியமில்லை எனத் தோன்றினாலும், 10 நாட்களில் தொப்பைக் குறைவதை யார்தான் விரும்ப மாட்டார்கள். வாருங்கள் உண்மை என்னவென்பதை கண்டறிவோம்.

'டவல்' உடற்பயிற்சியின் தோற்றம் :

ஒரு கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காக, ஜப்பானின் புகழ்பெற்ற பாத அழுத்த சிகிச்சை மற்றும் மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியால், பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த 'டவல்' உடற்பயிற்சி கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இந்த உடற்பயிற்சியினால் தொப்பையை குறைக்க முடியும் என உறுதியாக கூறியுள்ளார். மேலும் சரியான உடலமைப்பு, பலம் வாய்ந்த முதுகுத்தண்டு, நாட்பட்ட முதுகுவலியிலிருந்து நிவாரணம் போன்றவற்றையும், இந்த உடற்பயிற்சியினால் கூடுதலாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நிபுணர்களைப் பொறுத்தவரை, வயிற்றைச் சுற்றியுள்ள கூடுதல் சதையை இந்த உடற்பயிற்சி குறைக்க உதவும். அது பொதுவாக இடுப்புப் பகுதியில் தவறுதலாகப் படிந்திருக்கும். ஒருவர் இந்த உடற்பயிற்சியை இடைவிடாது செய்வதினால், அவரது இடுப்புப்பகுதியில் தவறுதலாகப் படிந்துள்ள சதையானது சரிசெய்யப்பட்டு, தொப்பையானது குறைகிறது.

'டவல்' உடற்பயிற்சியினை செய்யும் முறை :

முதலில் இந்த உடற்பயிற்சியினை செய்வதற்கு 'டவல்' எனப்படும் துண்டும், ஒரு யோகா மேட்டும் வேண்டும். பிறகு இந்த உடற்பயிற்சியினை கீழே வருவது போல படிப்படியாக செய்யவும்.

படி 1: கீழே விரிக்கப்பட்ட யோகா மேட்டில், விட்டம் அல்லது வானத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கை மற்றும் கால்களை நன்றாக நீட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள்.

படி 2: அடுத்து உங்களின் கீழ் முதுகுக்கு அடியில், தொப்புளுக்கு நேர் கீழானப் பகுதியில், ஒரு நடுத்தர அளவிலான 'டவல்' எனப்படும் துண்டை நன்றாக சுருட்டி வையுங்கள்.

படி 3: உங்களின் தோள்பட்டை பூமியில் நன்றாகப் படுமாறு வைத்து, கால்கள் இரண்டையும் 10 செண்டிமீட்டர் இடைவெளியில் நகர்த்தி வையுங்கள்.

படி 4: இப்போது உங்களின் கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகளானது பூமியை பார்த்தவாறு இருக்குமாறு வையுங்கள்.

படி 5: இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருங்கள். பிறகு மெதுவாக உடலைத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.

'டவல்' உடற்பயிற்சியினால் தொப்பை குறைவது சாத்தியமா?

வெறும் ஒரு 10 நாட்களுக்குள் எந்த உடற்பயிற்சினாலும், பலன்களைத் தர முடியாது. அதற்கு இந்த 'டவல்' உடற்பயிற்சியும் விதிவிலக்கல்ல. ஆனால் இந்த உடற்பயிற்சியினை தொடர்ந்து தினமும் செய்ய, கூனில்லாத நேரான, சரியான உடலமைப்பை பெற முடியும். முதுகுவலி சரியாகும்.மேலும் படிப்படியாக தொப்பைக் குறையும்.

எப்போதுமே வயிற்றின் நடுப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் சவாலானது. ஏனெனில் இங்குதான் கொழுப்பு மிகவும் அழுத்தமாகப் படிந்திருக்கும். பொதுவாக பலவித உடற்பயிற்சிகளினால் பெரும்பாலான மக்களுக்கு முதலில் உடலின் மற்ற பாகங்களில் உள்ள சதைகள் எல்லாம் கரைந்த பிறகு இறுதியாத்தான், இந்த தொப்பை குறைகிறது. மேலும் உணவு, உடற்பயிற்சி, தூங்கும் பழக்கம் மற்றும் மரபணுக்கள் ஆகிய பல காரணிகளும் மெலிந்த மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்புக்கு காரணமாக அமைகிறது.

ஆரோக்கியமான முறையில் தொப்பையைக் குறைப்பது எப்படி?

முதலில் இலக்கு வைத்து உடல் எடையை இழப்பது சாத்தியமில்லை என உணருங்கள். ஒருவளை நீங்கள் உடல் எடையை இழக்கத் தீர்மானித்து விட்டால், உங்கள் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் நீங்கள் எடையை இழப்பீர்கள் என்பதை உணருங்கள்.மேலும் உடலின் சில பகுதிகளில் நீங்கள் மற்றவர்களை விட வேகமாக எடையை இழப்பீர்கள். அதேபோல் உணவு அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றால் விரைந்து உடல் எடையைக் குறைக்கலாம், என சொல்பவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

ஏனெனில் திறம்பட உடல் எடையை இழப்பதற்கு நேரமெடுக்கும். தொப்பையில்லாத மெலிந்த உடலமைப்பை பெறுவதற்கு, அனைத்து சத்துகளும் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள். சரியான நேரத்தில் தூங்குங்கள். மனஅழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் குடி, புகைப்பிடிப்பது ஆகிய தீய பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags