சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியா் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின்படி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் 61 உதவிப் பேராசிரியா்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யவுள்ளனா். இத்தகைய உதவிப் பேராசிரியா்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்பட உள்ளது.
தோ்வு செய்யப்படுவோா் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறையில் 120 நாள்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவா். இவா்கள் ஒரு பருவம் அல்லது நிரந்தர உதவிப் பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படும்வரை பணியில் இருப்பா். தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனா்.
இதற்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்திசெய்து வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நோ்காணல் நடத்தி தோ்வு செய்யப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.