கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் உருமாறிய கொரொனா வைரசான ஒமைக்ரான் பாதிப்பும் ஏராளமானோருக்கு ஏற்பட்டுள்ளது. நம்நாட்டில் இதுவரை 1,200 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய மாநகரங்களில் பரவல் அதிகரித்துள்ளது.
காய்ச்சல், உடல்வலி, மூச்சுத் திணறல், சுவை குறைபாடு மற்றும் வாசனை அறியும் தன்மை இழத்தல், வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.தலை மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்படுவோருக்கும் பரிசோதனை அவசியம். இந்த அறிகுறிகள் இருப்போர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.மாநில அரசுகள் பரிசோதனைகள் செய்வதில் தீவிரம் காட்ட வேண்டும். 24 மணி நேரமும் பரிசோதனைக் கூடங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.