1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இணைய வழியாக தலைமை ஆசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முக்கிய கருத்துகள் 👇👇👇

 

வணக்கம்.


Date 13.12.23 புதன்

காலை 11 மணி முதல் 1 மணி வரை


நாமக்கல் கரூர் தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சுமார் 800 தலைமை ஆசிரியர்களை


மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இணைய வழியாக சந்தித்து கலந்துரையாடினார்.


கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துகள் 👇👇👇


நமது பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கவனத்திற்கும் உடனடி செயல்பாட்டிற்கும்.👇👇👇


ஆசிரியர்களே சமூகத்தை நிமிரச் செய்யும் முதுகெலும்புகள்.


ஆசிரியர்களே

சமூக மரம் சாய்ந்து விடாமல் காக்கும் ஆணி வேர்கள்


ஆசிரியர்களே அனைத்து துறை நிபுணர்களையும் பிரசவித்து கொடுக்கும்

தாய்மை வடிவங்கள்


இத்தகு சிறப்பு மிக்க ஆசிரியர்கள்


பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து


அதன் காரணமாக

உபரி ஆசிரியர் பணியிடங்கள் Abolish ஆவதை தடுக்கவும்


சேர்க்கை அதிகரித்து

ஆசிரியர் பணியிடம் அதிகரித்து

நிறைய ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்து


மாணவர் சேர்க்கையும் மாணவர் வருகையும்                             "தேர்ச்சியும்" அதிகரித்து


சமூக மறுமலர்ச்சி ஏற்பட


தங்களிடம் நாங்கள் அன்புடன் வேண்டுவது

👇👇👇👇


பள்ளி தொடங்கும் முன் பள்ளிக்கு வருகை புரிதல்


வகுப்பிற்கு உரிய நேரத்தில் சென்று விடுதல்.


வகுப்பறைக்கு செல்லும் போது TLM & Notes of Lesson உடன் எடுத்து செல்லுதல்.


பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்த்து புரிந்து படிக்க உதவுதல்


பாடப் புத்தகங்கள் தாண்டிய வாசிப்பை ஊக்குவித்தல். 


தமிழ் & ஆங்கிலத்தில் சுயமாக பேசவும் எழுதவும் கட்டுரை பயற்சிகள் அளித்தல்


மொழி ஆற்றல் வளர்த்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்தல்.


குழந்தைகளுக்கு தவறாமல் ஆய்வக அனுபவம் தருதல்.


மன்ற செயல்பாடுகள் மூலம்

சிறந்த ஆளுமைகளை குடிமக்களை வார்த்தெடுத்தல்.


கணக்கு சூத்திரங்களும் தமிழ் கவிதைகளும் மரத்தின் கிளைகளில் காய்த்து தொங்குதல்.


மணற்கேணி செயலி வீடியோக்களை பயன்படுத்துதல்.


 உங்களின் சிறந்த கற்பித்தல் திறனை வீடியோ வாக்கி மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்திட அனுப்பி வைத்தல்.


செப்டம்பர் & டிசம்பர் போன்ற தேர்வு மாதங்களில் விடுப்பு எடுப்பதை தவிர்த்தல்.


மாணவர் மனசு பெட்டியில் வரும் கடிதங்களுக்கும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருதல்.


"எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாக தமிழ் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)


"எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாக ஆங்கிலம் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)


"எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கு தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)


எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு நிச்சயம் ஒருவராவது NEET/JEE / NIFT / CLAT / NATA தேர்வுகளில் வெற்றி பெறுவோம்.(12 ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் தகுதியான அனைவரும் தொழில் கல்வி படிப்பில் நிச்சயம் சேருவோம்.(12ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் உள்ள தகுதியான மாணவிகள் அனைவரும் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து புதுப்பெண் திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவோம்.(12 ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் முதலமைச்சர் திறனறி தேர்வில் வெற்று 6 ஆண்டுகள் மாதம் ரூ.1000 பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் தமிழ்த் திறனறித் தேர்வில் வென்று 2 ஆண்டுகள் மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகளுக்கு வருடம் ரூ.12000 ஊக்கத் தொகை நிச்சயம் பெறுவோம். (8 ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் ஊரக திறனறித் தேர்வில் (TRUST) தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் ரூ.1000 ஊக்கத் தொகை பெறுவோம். (9 ஆம் வகுப்பில்)


எங்கள் வகுப்பில் NTSE தேர்வில் வெற்றி பெற்று

Ph.D படிக்கும் வரை ஊக்கத் தொகை பெறுவோம். (பத்தாம் வகுப்பில்)


போன்ற ஊக்குவிக்கும் வாசகங்களால் வகுப்பறைகளுக்கு வாசம் சேர்த்தல்.


வெற்றியோ தோல்வியோ

முயற்சியை மட்டும் கைவிடாது இருத்தல்.


TLM அறை பராமரித்தல்.

TLM காட்சிப்படுத்தல்.


உள்ளூர் மக்களுடன் & பெற்றோர் மகிழும் வண்ணம் இணைந்து செயல்படுதல் அதிக வெற்றி தரும்.


வருகிற 2024 புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக அனைவருக்கும் அமைய இனிய நல் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐


நன்றி.🙏🙏🙏🙏


வணக்கம்.


அன்புடன்

த.ஆ. 13.12.23




Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags