Home »
Public exam
» தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதத்துக்கு தள்ளிப்போனது. அதன்படி, அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருப்பதால், அதற்கு மறுநாள் நடக்க இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வை மட்டும் வேறொரு நாளுக்கு தள்ளி வைத்து அரசுத் தேர்வுத்துறை கடந்த 12-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 5-ந் தேதி (புதன்கிழமை) ஆங்கிலம் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால், அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்தும் மத்திய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அந்தவகையில் தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத்தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
1 comment:
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No this is fake
ReplyDelete