தமிழகம் : திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதியில்லை ; 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
முதல் அமைச்சர் பழனிசாமியுடன் இன்று பிற்பகல் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்
முழு ஊரடங்காக இல்லாமல் பணி நேரம், குறைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை ஆகிய வற்றிற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். கூட்டம் அதிகமாக கூடும் வாரச்சந்தைகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது.
அதன்படி தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது அதன் விவரம் வருமாறு:-
* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை!
* மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள் இயங்க அனுமதியில்லை
* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்
* கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை
* சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி
* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது
* இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை
* உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி - அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
* உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி
* மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.