குடிமை பணிகள் பயிற்சி மையம் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' பயிற்சி
அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் சார்பில், மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, பாடத்திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, அரசு அலுவலர்களுக்கும், குடிமை பணிகள் பயிற்சி மாணவர்களுக்கும், சில கட்டுப்பாடுகளுடன், நேர்முக பயிற்சிகள் நடத்தப் பட்டன. இப்பயிற்சிகளை இணையம் வழியே நடத்தும் வகையில், 'AICSCC TN' மற்றும், 'AIM TN' என்ற, 'யூடியூப்' சேனல்கள் துவக்கப்பட்டன.
இதில், ஏ.ஐ.சி.எஸ்.சி.சி., - டி.என்., சேனலில், அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 433 தலைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, 19 ஆயிரத்து, 300 சந்தாதாரர்களுடன் செயல்படுகிறது.ஏ.ஐ.எம்., - டி.என்., சேனலில், அரசு அலுவலர்களுக்கான செய்திகள் வழங்கப்படுகின்றன. இதில், 115 தலைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, 3,430 சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது.
பேரிடர் மேலாண்மை,நேர மேலாண்மை,அலுவலக நடைமுறை,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், இணைய வழி பாதுகாப்பு வழிமுறைகள், தகவல் பெறும் உரிமை சட்டம், மின் ஆளுமை, பேரிடர் மேலாண்மை போன்ற தலைப்புகளில், உரைகள் ஒளிபரப்பப் படுகின்றன.தற்போது, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, அண்ணா மேலாண்மை நிலையத்தில், தற்காலிகமாக பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதிப்படையாத வகையில், சம கால நிகழ்வுகளில் ஏற்படும், சமூக பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் நடைமுறை குறித்த பல்வேறு உரைகள், இரண்டு சேனல்களிலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவேற்றம் செய்யப்படும்.இதை மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அண்ணா மேலாண்மை நிலையம் இயக்குனர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.