1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உணவு உண்ணும் முறை மற்றும் காலை, மதிய, இரவு உணவுகள் எப்படி இருக்க வேண்டும்?....

அருமையான தகவலை தெரிந்து கொள்வோம்....

உணவு உண்ணும் முறை மற்றும் காலை, மதிய, இரவு உணவுகள் எப்படி இருக்க வேண்டும்?....

#உணவுஉண்ணும்முறை....


உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.

சாப்பிடும்போது சாய்ந்து படுத்துக் கொண்டோ, நின்று கொண்டோ சாப்பிடக்கூடாது.

விரும்பிய உணவாக இருந்தாலும் வயிறு புடைக்க உண்ணக் கூடாது.

வெட்ட வெளியில் நின்று உண்ணக்கூடாது.

அதேபோல் கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது.

சாப்பிடும்போது சம்மணமிட்டு அமர்ந்து, உட்கார்ந்திருக்கும் நிலைக்கு சிறிது கீழே உண்ணும் பாத்திரத்தை வைத்து உண்ண வேண்டும். இந்த பொசிஷனே உணவு இரைப்பைக்குத் தடையின்றிச் செல்ல ஏதுவானது.

நாம் உண்ணும் உணவில் அறுசுவை கூறுகளும் இருப்பது மிகவும் அவசியம்.

இனிப்புப் பண்டங்களை முதலில் எடுத்துக் கொள்ளும் போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும், செரிமானம் தூண்டப்படும். இந்தச் செயல்கள் உண்ட உணவு நன்கு செரிமானமாகி அடுத்த வேளை பசியெடுக்க உதவும்.

கசப்பான பொருள்களை உண்ட பிறகு மற்ற பொருள்களை உண்ணுவது சிரமம். ஆதலால் கசப்புச் சுவையை கடைசியில் உண்ண வேண்டும்.

இதற்கிடையில் மற்ற புளிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடைய பொருள்களை உண்ணலாம்.
காலை உணவின் முக்கியத்துவம்

காலை உணவு என்பது அந்த நாளில் உடல் இயங்குவதற்கான சக்தியை அளிக்கக்கூடிய மூலப்பொருள். இரவு உணவு முடிந்து தோராயமாக 7 மணி நேர உறக்கத்துக்குப் பின் காலை உணவை எடுத்துக்கொள்ளத் தயாராகிறோம். இந்த, நீண்ட இடைவெளிக்குப் பின் உடல் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, நமது சீரண உறுப்புகள் உணவைப் பெற்று ஜீரணித்து சக்தியை உடலுக்கு அளிக்கத் தயாராக இருக்கும்.

உடலுறுப்புகள் மற்றும் மூளை இயங்க குளுக்கோஸ் மிகவும் அவசியம். இந்தக் குளுக்கோஸ் காலை உணவிலிருந்து உடலால் உட்கிரகிக்கப்படும். ஒருவேளை காலை உணவைச் சாப்பிடாமல் விட்டால், மூளை தனது ஆற்றலை இழந்து சோர்வடையும்.

தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு சர்க்கரைநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, காலை உணவைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#காலைஉணவுஎப்படி இருக்க வேண்டும்?

எளிதில் செரிமானமாகி உடலுக்கு நன்கு சக்தி அளிக்கக்கூடிய மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

இட்லி, கஞ்சி வகைகள், நீராகாரம், ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை.

புளிப்புச் சுவையுடைய பழங்களைத் தவிர மற்ற பழங்களை காலையில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புளிப்புச் சுவையுடைய பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் அவை வயிற்றுப்புண்ணை உண்டு பண்ணும் வாய்ப்புண்டு.

அல்சர் இருப்பவர்கள் வாழைப்பழம், இளநீர், டீ மற்றும் காஃபி ஆகியவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மதிய உணவு எப்படி இருக்க வேண்டும்?

மதிய உணவு என்பது இனிப்பு, பழங்கள், காய்கறிகள், பருப்பு சாம்பார், ரசம் மற்றும் மோர் என்ற வரிசையில், நிறைவான உணவாக இருப்பது அவசியம்.
இரவு உணவு எப்படி இருக்க வேண்டும்?

இரவு உணவும், காலை உணவைப்போல எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருக்க வேண்டும்.

இரவு உணவுக்குப் பின் டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
பிற பொதுவான ஆலோசனைகள்

உணவு உட்கொள்ளும் அரைமணி நேரம் முன்பு டீ அல்லது காபி போன்ற எந்த ஒரு பானத்தையும் அருந்தக் கூடாது.

அதேபோல், உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டும்.

இன்று பலர் அறுசுவைகளில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய உணவுகளை உண்பதில்லை. இது முற்றிலும் தவறு. அவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவை நன்கு மென்று, கூழாக்கி உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும்.

உணவு உண்ணும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.

விருப்பமான உணவாக இருந்தாலும், வயிறு நிறைய உண்ணாமல் முக்கால் வயிறு அளவிற்கு உண்பதே நலம்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags