'வாட்ஸ் ஆப்'பில் வகுப்புகள் 8ம் வகுப்பு வரை நடத்த உத்தரவு
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் பாடம் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓர் ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வகுப்புகளை நடத்தாவிட்டால், மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப் படும் என, பெற்றோர்கள் கருதினர். இது குறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து பள்ளிக்கு பணிக்கு வரவும், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தவும், தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களும், 'ஓபி' அடிக்காமல், தினமும் பள்ளி பணிக்கு வர வேண்டும். நேரத்தை வீணடிக்காமல், 'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களை குழுவாக இணைக்க வேண்டும்.
வீடியோ கால், எஸ்.எம்.எஸ்., வழியாக பாடங்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் இணைப்பு பாடங்களுக்கான பயிற்சிகளை, ஆன்லைனில் வழங்க வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்க பட்டு உள்ளது.
கல்வி 'டிவி'
இதுதவிர, கல்வி 'டிவி'யில் மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்பவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி முதல் தினமும் பகல், 12:30 மணிக்கு, கல்வி 'டிவி' யில் பாட நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.முதல், 30 நிமிடங்கள், 8ம் வகுப்பு, பின், 7ம் வகுப்பு என்று படிப்படியாக, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் மாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் வகுப்புடன், 'வீடியோ' பாடங்கள் முடிகின்றன. முதல் நாளில் கணிதம்; ஏப்., 27ல் அறிவியல்; 28ல் சமூக அறிவியல்; 29ல் தமிழ்; 30ல் ஆங்கிலம் என, மே, 10 வரை, கல்வி 'டிவி' நிகழ்ச்சிகள் தொடரும்.இந்த பட்டியல், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்; 'வாட்ஸ் ஆப்'பிலும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என, தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.