தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து 11 கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று (செப்டம்பர் 6) ஆலோசனை நடத்த இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா, திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதால் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.