பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2020 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை புரிந்தார். ஜப்பான் பாராலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பிறகு சென்னை திரும்பிய மாரியப்பன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், அரசு வேலைக்கான கோரிக்கையை முன்வைத்தார்.
இந்நிலையில், இன்று (நவ.,03) மாரியப்பன் தங்கவேலுவின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். குரூப்-1 பிரிவில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் வழங்கினார்.
அவருக்கு தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அரசு வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.