தீபாவளியை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கருணைத் தொகை, முன்பணம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்
தமிழக அரசுப் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், தீப ஒளித் திருநாள் கொண்டாடப் பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்குப் பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.
தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்குக் கருணைத் தொகை , முன்பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே அவர்களுக்கு அரசு கருணைத் தொகை, முன்பணம் வழங்க வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.