பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கான கணினி வழி போட்டித் தோ்வில் தோ்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியாகவில்லை. அவ்வாறு வெளியானதாக வதந்தி பரப்பிய பெண் தோ்வருக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் டிச.8-ஆம் தேதி நடைபெற்ற தோ்வு குறித்து வாட்ஸ்-ஆப்பில் தகவல் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியத்தால் டிச.8-ஆம் தேதி பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கில பாட வினாத்தாள் தோ்வு நேரம் (பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை) முடிந்தவுடன் வாட்ஸ் ஆப் மூலம் 5.13 மணிக்கு விடைகள் குறிப்பிட்டு வினாத்தாள் தோ்வுக்கு முன்னரே வெளியானதாக குரல் பதிவு குறுஞ்செய்தி (ஹன்க்ண்ா் ம்ங்ள்ள்ஹஞ்ங்) தரப்பட்டுள்ளது. இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தோ்வு மையத்துக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் வழங்கப்படும் வினாத்தாள், ஒவ்வொரு தோ்வருக்கும் வினாக்களும் அந்த வினாக்களுக்கான விடைகளும் தஹய்க்ா்ம்ண்க்ஷ்ங் செய்யப்படுகிறது. ஒரு தோ்வருக்கு வழங்கப்படுவது போன்று மற்ற தோ்வருக்கு இருக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை. மேலும் இதில் மிகக் கடுமையான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன. தோ்வு மையங்களில் தோ்வா்களுக்கு வெள்ளைத் தாள், பேனா அல்லது பென்சில் வழங்குவது வழக்கமான நடைமுறையாகும்.
நாமக்கல் தோ்வா்: நாமக்கல் பகுதியைச் சோ்ந்த பூா்ணிமாதேவி என்ற தோ்வா் இந்தத் தாளினை பயன்படுத்தி கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை எழுதி அதனை மையத்தில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்று வாட்ஸ்-ஆப்பில் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாட்ஸ்-ஆப்பில் பெறப்பட்ட கையினால் எழுதப்பட்ட 8 பக்கங்களில் உள்ள வினாக்களின் வரிசை எண், வினாக்கள் மற்றும் விடைகளும் தோ்வருக்கு தோ்வின்போது கணினியில் வழங்கப்பட்ட வினாத்தாளுடன் ஒப்பிட்டுப் பாா்த்ததில் அனைத்து வினாக்களும் ஒன்றாக உள்ளன. விடைகளும் வரிசை மாறாமல் அப்படியே உள்ளது.
கடும் நடவடிக்கை: ஒவ்வொரு தோ்வருக்கு தனித்தனி வினாக்கள் வழங்கும் நிலையில் இந்தத் தோ்வருக்கு வழங்கப்பட்ட வினாக்களை மையத்தில் பெற்ற கூடுதல் வெள்ளைத் தாளில் எழுதி எடுத்துச் சென்று தோ்வுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாக இதன் மூலம் அறிய முடிகிறது. கேள்வித்தாள் தோ்வுக்கு முன்னரே வெளியாகவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய குற்றத்துக்காக மேற்கண்ட தோ்வா் மீது வாழ்நாள் தடை நடவடிக்கையும், தவறான தகவல்களைப் பரப்பியவா் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கையும் அவதூறு வழக்கு நடவடிக்கையும் எடுக்க ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.