திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு: மே 31க்கு மொழிபாட தேர்வு மாற்றம்
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.
மொழி பாட தேர்வு மட்டும் மாற்றம்
இந்நிலையில், இன்று (ஏப்.12) முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பின்னர் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 3-ந்தேதிக்குப்பதில் மே 31-ந்தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. மே- 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் மே-3 ம் தேதி நடைபெறும் தேர்வு மட்டும் மே-31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேர்வுகள் சமூக இடைவெளியுடனும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.