வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் பெறப்படும் என்றும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “80 வயது நிரம்பிய 92,559 முதியவர்களும், மாற்றுத்திறனாளிகள் 30,894 பேரும் தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் மே 2-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும். மொத்தம் 4.66 லட்சம் அஞ்சல் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.