'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல இயற்கையாக மனித உடலும் நீரின்றி அணுவளவு கூட இயங்காது. மனித உடலில் சராசரியாக 70% நீர் உள்ளது.
மூளை மற்றும் இதயத்தில் 73 சதவிகிதம், நுரையீரலில் 83%, தொழில் 64%, தசைகள் மற்றும் சிறுநீரகத்தில் 79% , எலும்புகளில் 31% நீர்ச்சத்து உள்ளது.
எனவே அன்றாட உடலியல் செயல்பாடுகளுக்கு நீர் அவசியம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க நீரில் உள்ள சத்துகள் தேவைப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 20 கிலோ எடைக்கு 1 லிட்டர் என்ற விகிதத்தில் டீ தண்ணீர் அருந்த வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
ஆனால் அந்த தண்ணீரின் சத்துகள் முழுமையாக தடையின்றி உடல் உறுப்புகளுக்கு கிடைக்க தண்ணீரை அருந்தும் முறை உள்ளது.
அதில் குறிப்பாக நின்று கொண்டு தண்ணீர் பருகக் கூடாது. நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றின் மலக்குடலுக்குச் சென்றுவிடும். அதேபோல வேகமாகச் செல்லும். இது உடல் உறுப்புகளில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் பாதிப்பு, அல்சர் பிரச்னை, நெஞ்செரிச்சல், வயிற்று செரிமானப் பிரச்னைகள், நரம்பு கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இதன் தாக்கங்கள் உடனடியாக ஏற்படாது என்பதால் பலரும் இதனைக் கண்டுகொள்வதில்லை.
சிலர் வெயிலில் நடந்துவிட்டு தாகம் அதிகமாகும்போது வேகவேகமாக ஒரு லிட்டர் தண்ணீரை காலி செய்வார்கள். அதுபோல வேகமாக தண்ணீர் குடிக்கும்போது உடல் உறுப்புக்கள் பாதிப்படையும்.
ஆயுர்வேத முறைப்படி நீரை வாயில் வைத்து மெல்ல மெல்ல விழுங்க வேண்டும். கண்டிப்பாக உட்கார்ந்து நிதானமான நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி செய்யும்போது நீரானது உடல் உறுப்புகளுக்கு சரியாக செல்கிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.