மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.2600(204-1)SAI(/CD/2021(Vol.II)
பணி: Coach
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.1,05,000 - 1,50,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு புகழ்பெற்ற விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2021
மேலும் விவரங்கள் அறிய www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும் .
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.