நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 14.37 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. www.ntaneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளுடன், தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும் நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.