அக்டோபர் 1 முதல் கடுகு எண்ணெயுடன் மற்ற சமையல் எண்ணெய்கள் கலந்து தயாரிக்கும் அனுமதி  தடை செய்யப்படும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதுவரை கடுகு எண்ணெயில் 20 சதவீத மற்ற சமையல் எண்ணெயை கலக்க நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்த பிறகு, நிறுவனங்கள் தூய கடுகு எண்ணெயை மட்டுமே தயாரிக்க அனுமதிக்கப்படும். கடுகு எண்ணெயுடன் மற்ற சமையல் எண்ணெய்களைக் கலப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கடுகு எண்ணெயின் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. | |
எஃப்எஸ்எஸ்ஐ ,ஆகஸ்டில் நாடு முழுவதும் இருந்து 4,500 சமையல் எண்ணெய்களின் மாதிரிகளை தரப்பரிசோதனைக்காக சேகரித்தது. சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விற்பனையைத் தடுப்பதற்காக டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து தலா 50 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன . மேலும் பெருநகரங்களைத் தவிர சிறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தலா ஆறு எட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன |
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.