அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கான சேர்க்கையை 30ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை நிரப்ப கல்லூரிகள் தொடர்ச்சியாக மாணவர் சேர்கையை நடத்தி வருகின்றன.
இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 30-ம் தேதி வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் (2020-2021) இளநிலை (UG) படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளநிலை (UG) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடித்து விட்டு, அக்டோபர் முதல் முதுகலை (PG ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.