சேலம் பள்ளி ஆசிரியைக்குக் கரோனா
சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை இன்று கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கரோனோ தொற்று காரணமாகக் கடந்த 10 மாதங்களாக மூடியிருந்த பள்ளிகள் கடந்த 19-ம் தேதி முதல் திறக்கப்பட்டன. சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆசிரியைக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். இந்தப் பரிசோதனையில் அவருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது இன்று (22-ம் தேதி) உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியைக்குக் கரோனா தொற்று பரவியதை அடுத்து, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சேலம் பெரிய கிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு நேற்று (21-ம் தேதி) கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு இன்று கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.