பொதுத்தேர்வு வினாத்தாள்:
கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்களின் சுமையை கருத்தில் கொண்டு 40% அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கடினமாக கேள்விகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், அரசின் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் இருந்து தான் பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
தற்போது பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு விபரங்கள் வெளியிடப்பட்ட்டு உள்ளதால், அதன் அடிப்படையில் வினாத்தாளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் மீதமுள்ள 60% பாடத்திட்டத்தில் இருந்து மாதிரி வினாத்தாள்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு அடுத்த மாதத்தில் மாதிரி தேர்வு நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.