அரசுப் பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், இணையம் மற்றும் கணினி வசதியுடன் கூடிய, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலைப் பள்ளிக்கு, 10 கணினி மற்றும் உபகரணங்களும், மேல்நிலைப் பள்ளிக்கு, 20 கணினிகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முன்னர், கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த பத்து மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படாததால், ஆய்வகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கியுள்ளதால், மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆய்வகத்தைத் தயார்படுத்தி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள் செயல்படுவதில் குறைபாடுகள் இருப்பின், எல் அண்ட் டி நிறுவனத்தால் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களைக் கொண்டு, சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைச் செய்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஆய்வகங்கள் தயாராக இருப்பதைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையைப் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.