திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்தாகுளம் அரசுப்பள்ளிமாணவிகள் பா,தேவகி மற்றும் க.குமரபாரதி ஆகிய இருமாணவிகள் சமர்ப்பித்த அறிவியல் ஆய்வறிக்கையானது, தேசிய அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வாகி சிறப்பிடம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்தாகுளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளான பா.தேவகி மற்றும் க.குமரபாரதி ஆகியோர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய அறிவியல் ஆய்வறிக்கைப் போட்டியில், நிலையான வாழ்விற்கு சூழலியல் மற்றும் பொருளாதாரத்தில் பனையின் பங்களிப்பு, எனும் தலைப்பில் தாங்களும் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தனராம்.
இதில் அம்மாணவிகளின் ஆய்வறிக்கையானது தேசிய அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வாகி சிறப்பிடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக இவ்விருமாணனவிகள் கூறியதாவது, எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியையான நா.மீனாம்பிகையின் ஆலோசனையின்படி, வழிகாட்டி ஆசிரியை ச.முத்துக்குமாரி ஆகியோர் உதவியாக இருந்து, ஊக்கமளித்ததாலேயே எங்களால் இந்த வெற்றியை எட்ட முடிந்தது. ஆகவே அவர்களுக்கும், மற்றுமுள்ள எங்கள் பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம், எனத் தெரிவித்தனர்.
மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்த ஒரு எளிய, பனைமரங்கள் சூழ்ந்த கிராமமான விடத்தாகுளத்தின் அரசுப்பள்ளி மாணவிகளின் ஆய்வறிக்கை தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வானது குறித்து, பள்ளித்தலைமை ஆசிரியையும், பிற ஆசிரியர்களும், மேலும் அக்கிராமத்தினரும், அப்பள்ளியின் பிற மாணவ, மாணவிகளும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.