பிரியாணி இலைக்கு லவங்கபத்திரி, பிரிஞ்சி இலை, பட்டை இலை என வேறு பெயர்களும் உள்ளது.
பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பிரியாணி இலையில் உள்ள மருத்துவக் குணங்களை கீழே காணலாம்.
*பிரிஞ்சி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கை, கால், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தலைவலியின் போது இந்த எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலி உடனே சரியாகி
விடும்.
*பிரியாணி இலையில் உள்ள என்சைம்ஸ் என்ற புரதப் பொருள் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகிறது.
* பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னைகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யும். மேலும், இந்த நீரை குடிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
*பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும்.
*பிரியாணி இலையை டீயில் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல், குடலியக்க பிரச்னைகள் குணமாகும்.
* டைப்- 2 நீரிழிவு நோயாளிகள் பிரியாணி இலையை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.