வருமான வரி செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ், ஒரு வருடத்தில் நீங்கள் சம்பாதித்த வருமானத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு அரசிற்கு வரியை நீங்கள் செலுத்த வேண்டும். இந்தியாவில்,வருமான வரி என்பது ஒரு நபரின் வருமானத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். இந்த வரி விகிதங்கள் வருமான ஸ்லாப்ஸ் னப்படும் வருமான வரம்பை அடிப்படையாக கொண்டவை.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் வரிச்சலுகைகள் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டு ஏதேனும் மாற்றம் உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2021-22 நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் போது தனிநபர் வருமான வரி ஸ்லாப்ஸ் மத்திய அரசு மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், பிற நடவடிக்கைகள் மூலம் வருமான வரி நிவாரணம் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக சில செய்திகள் தெரிவித்துள்ளது. தற்போதைய வரிச்சலுகைகள் ரூ. 2.5-5 லட்சத்திற்கு இடையிலான வருமானத்திற்கு 5 சதவீதமும், ரூ. 5-10 லட்சத்திற்கு 20 சதவீதமும், ரூ .10 லட்சத்தை விட அதிக வருமானத்திற்கு 30 சதவீதத்தை கொண்டுள்ளது.
புதிய வரி ரெஜிமை தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு விகிதங்கள் சற்று வேறுபடுகின்றன. மலிவு வீட்டுவசதி பிரிவில் ஹவுஸ் ஓனர்களை ஊக்குவிக்க வருவாய் துறை அதிக வரி சலுகைகளை கொண்டுவந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. பிரிவு 80C இன் கீழ் விலக்குகளுக்கான வரம்பை தற்போதைய ரூ .1.5 லட்சத்திலிருந்து ரூ .2 லட்சமாக உயர்த்துவதற்கான கோரிக்கைகளையும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தற்போதைய ரூ .25,000 வரம்பைத் தாண்டி பிரிவு 80D இன் கீழ் சுகாதார காப்பீட்டு பிரீமியத்திற்கான விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு மதிப்பீடு செய்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.