அது மெல்ல மெல்ல இந்தியாவிற்குள்ளும் ஊடுருவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. சமீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே மக்கள் மத்தியில் மீண்டும் லாக்டெளன் வருமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி மீண்டும் லாக்டெளன் அமல்படுத்தினால் வேலை, வாழ்வாதாரம் என்னாகும் என்பது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இந்தநிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து, மே மாதம் 2-ம் தேதி, 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்பட இருக்கின்றன. சுமார் ஒரு மாத கால இடைவெளியில் அரசு லாக்டெளனை அமல்படுத்தப்போகிறது என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
தடுப்பூசிக்காகவா, தேர்தலுக்காகவா?' - அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையும் சர்ச்சைகளும்!அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். `` லாக்டெளன் அறிவிக்க அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக அரசு காபந்து அரசாக மாறிவிட்டது.
அதாவது, பல் இல்லாத பாம்பு போல. அத்தனை அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். இங்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தல் நடக்கும் கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமிலும் இதே நிலைதான். அதனால், தமிழக அரசோ, முதல்வரோ தளர்வில்லாத ஊரடங்கினை அமல்படுத்த முடியாது. எனினும், மத்திய அரசுக்கு லாக்டெளன் அறிவிக்க அதிகாரம் உள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதியோடு தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிகிறது. ஆனால் அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஏப்ரல் இறுதிவரை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதனால், ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மட்டும் லாக்டெளன் அறிவிக்க முடியாது. ஒட்டுமொத்தமாகவும் ஏப்ரல் 6-க்குப் பிறகு ஊரடங்கு அமல்படுத்த முடியாது.
ஏனெனில், அந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு மாநிலத்தில் தேர்தல் நடந்தாக வேண்டும்.\u003c/p\u003e\u003cp\u003eநான்கு மாநில வாக்குப்பதிவும் முடிந்து, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, ஐந்து மாநிலங்களிலும் புதிதாக பொறுப்பேற்கும் அரசு வேண்டுமானால் ஊரடங்கினை அமல்படுத்தலாம். அல்லது மத்திய அரசே மே 2-ம் தேதிக்கு பிறகு லாக்டெளன் அமல்படுத்தலாமே தவிர, ஏப்ரல் 6-க்கும் மே 2-க்கும் இடையே ஊரடங்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று!
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.