நாட்டில் பெரும்பாலான மாநிலங்களவை கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன
இந்நிலையில் கரோனா தடுப்பிற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் முன்பே அறிவித்துள்ளவாறு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக RT-PCR பரிசோதனையை 70% அளவில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்
பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுதல் ஆகியவை தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் தனிநபர் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது
சில மாநிலங்களில் போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசு தனியாக செயல்படுத்தக்கூடாது
வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும்
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.