நீங்கள் உங்கள் மூளைக்கு செலுத்தும் எண்ணத்தின் பிரதிபலிப்புகள் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையிலும் வெளிப்படும். உதாரணத்திற்கு நீங்கள் தொடர்ந்து யாராவது ஒருவரை குறைகூறிக் கொண்டே இருந்தாலும்,புறம் பேசுவதாக இருந்தாலும், பல விஷயங்களுக்கு எதிர்மறை பதில் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது செயலை செய்வதற்கு நீங்கள் சாக்குப்போக்கு சொல்லி கொண்டு இருந்தாலும், நீங்கள் எளிதாக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதாவது உங்களுடைய எண்ணங்களை உங்களுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்
இதற்கு மாற்றாக, நீங்கள் தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருக்கும்போது, தொடர்ந்து மிகுதி தன்மை அதிகமாக இருக்கிறது என்று எண்ணும் போது, அனைவரிடமும் அன்பு செலுத்தும் போதும், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் நன்றி உணர்வுடன் இருக்கும் போதும், மன்னிப்பு உணர்வுடன் இருக்கும் போதும், இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நேர்மறையான பிரதிபலிப்புகளை தருவதற்கு மிகவும் எளிதான ஒரு வழித்தடமாக அமைகிறது. இந்தப் பழக்கத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவது சற்று கடினம். ஆனால் நீங்கள் முயற்சியின் பேரில் இந்த எண்ணங்களை உங்களுக்குள் நீங்கள் கொண்டு வந்து விட்டால் இதைவிட ஒரு மிகப்பெரிய ஒரு சக்திவாய்ந்த ஒரு விஷயம் எதுவும் கிடையாது. இது உங்களுடைய வாழ்க்கையை முற்றிலும் நல்ல முறையில் மாற்றி அமைத்து நீங்கள் நினைக்கும் விஷயங்கள் உண்மையானதாக மாற ஆரம்பிக்கும்.
இதுதான் மூளையின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் முறை இந்த பயிற்சி முழுக்க முழுக்க எண்ணங்களுடன் தொடர்புடையது பிரபஞ்சத்துடன் தொடர்புடையது இந்தப் மூளைக்கான பயிற்சியை எந்த மனிதர் சரியாக கடைபிடிக்கிறார்கள் அவர்களுக்கு அவர்களின் எண்ண பிரதிபலிப்பு நடக்கும் நாள் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்!!!!!
அனைவரும் இந்த பயிற்சியை தயவு செய்து செய்து பிரபஞ்சத்திடம் நீங்கள் கேட்டது கிடைக்கும் வண்ணம் உங்கள் மூளையை நல்ல எண்ணங்களால்
மாற்றிவிடுங்கள்....
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.