துளசி இலை சிறிதளவு எடுத்துக்கொண்டு அத்துடன் சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி குணமாகி விடும்.
தொண்டைக் கரகரப்புக்கு..
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டைக் கரகரப்பு குணமாகும்.
நெஞ்சுச் சளி சரியாக..
தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சுட வைக்க வேண்டும். இப்போது அந்த எண்ணெயை நெஞ்சில் தடவ சளி குறையும்.
இரவு நேரத்தில் பாலுடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட நெஞ்சுச் சளி குறையும்.
மூக்கடைப்புக்கு..
நீரில் சுக்கை போட்டு சிறிது நேரம் கொத்தித்த பின்னர் அத்துடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூக்கடைப்பு சரியாகிவிடும்.
நெல்லிக்காய்ச் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குடித்துவர மூக்கடைப்பு குறையும்.
வறட்டு இருமல் சரியாக..
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.
பொதுவாக மிளகு, மஞ்சள், தேன் ஆகியவற்றை ஏதேனும் ஒருவகையில் எடுத்துவர சளி, இருமல், மூக்கடைப்பு வராது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.