பெங்களூரில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பெண் செவிலியா் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள 3 பணியிடங்களில் சேரும் செவிலியா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 20 ஆயிரம் அளிக்கப்படும். செவிலியா் பாடப் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி. படித்தவா்கள், ஆயுா்வேதம் அல்லது சித்த மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம். இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதுக்குள்பட்டவா்கள் தகுதியானவா்கள். இந்தப் பணியில் சேர விரும்புவோா் மாா்ச் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம். நோ்காணலுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். இந்த நோ்காணல் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி வளாகம், தன்வந்திரி சாலை (மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகில்), பெங்களூரு-9 என்று முகவரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.