சோளத்தை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க, அதில் இயற்கையாக உள்ள இனிப்புச்சுவை தூக்கலாக தெரியும். ருசியும் கூடும்.
மோர்க்குழம்புக்குப் புளித்த மோர் இல்லையென்றால், மூன்று புளிப்பான தக்காளியை மோர்க் குழம்புக்குத் தேவையான சாமான்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும்.
கொத்தமல்லி மலிவாக கிடைக்கும்போது அதை வாங்கி நறுக்கி, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துவடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து ரசத்தில் பொரித்துப் போடலாம்.
சாதம் குழைந்துவிட்டால், பாதி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, பிறகு வடித்தால் சாதம் பூப்போல் "பொல பொல' வென இருக்கும்.
காலையில் அரைத்த தேங்காய்ச் சட்னி மீதமாகிவிட்டால் அத்துடன் புளித்த மோர் அல்லது தயிருடன் மஞ்சள்தூள் சேர்த்து தாளித்துக் கொதிக்கவிட வேண்டும். இதுவே மதிய உணவுக்கான மோர்க்குழம்பு ஆகிவிடும்.
வெந்தயக்குழம்பு தயார்செய்து இறக்கும் போது ஒரு டீஸ்பூன் எள்ளுப்பொடியைப் போட்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.
பாயசம் நீர்க்க இருந்தால், அதில் வாழைப்பழத்தைப் பிசைந்து போட்டு, கொஞ்சம் தேனும் கலந்தால் போதும்... சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்!
க்ரீம் பிஸ்கட்டிலுள்ள க்ரீமை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து... பாயசம், கீர், ஃப்ரூட் சாலட், பூசணி அல்வா ஆகியவற்றில் சேர்த்தால் சுவை கூடும்.
வேப்பிலைக் கொழுந்தில் வெண்ணெய் மற்றும் மோர் விட்டு அரைத்து தீப்புண் ஏற்பட்ட இடத்தில் தடவி வர... எரிச்சல் அடங்கும்; புண் எளிதில் குணமாகும்.
உருளைக்கிழங்கை அரை மணி நேரம் உப்புத்தண்ணீரில் ஊற வைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது.
சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு, எதைப் பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிய தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் பருப்பு விரைவில் வெந்து, பக்குவமாக இருக்கும்.
தோசைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் வெண்டைக் காயையும் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.
தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டு, அதில் சிறிது எலுமிச்சைப்பழச் சாறு கலந்தால் ருசி அதிகமாக இருக்கும்.
கருணைக்கிழங்கை வேகவைக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேகவைத்தால், வெகு சீக்கிரம் பஞ்சுபோல் வெந்துவிடும்.
உளுந்து வடை செய்யும்போது, ஒரு கை சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உள்ளே மெத்தென்றும், வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மாவுடன் சேர்த்து அரைத்துத் தட்டினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.