திட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?PUB
திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி முதல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருத்தல், மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு, முழுமையாக குணமடைந்தபின் வேறொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா என சந்தேகம் எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ம் தேதி முதல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.