தமிழகததில் 9,10- வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா காரணமாக மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வகுப்புகளில்
பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பயிற்சி புத்தகம் ஒன்று வழங்கப்பட உள்ளது. அந்த பயிற்சி
புத்தகத்தை மாணவர்கள் முழுவதும் பயில்வதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்துவார்கள்.
இதனையடுத்து மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அந்தப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை அனுப்பி அதன்மூலம் பதிலை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஒவ்வொரு
பாடத்திலும் அந்தந்த பாடத்
தலைப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களின் திறன் அறியப்பட உள்ளது..
இந்தத் தேர்வு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பத்தாம் வகுப்பில் அனுமதிப்பது குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்களை பதினோராம் வகுப்பில் அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரசு தேர்ச்சி
வழங்கியுள்ள நிலையில் தற்போது மாணவர்களின் திறனை அறிய பள்ளி அளவில் ஒரு
தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.