ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப, வரும் டிச.,15 முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது: ரயில்வேயில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப டிச.,15 முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக தற்போது வரை தேர்வு நடத்தப்படவில்லை. காலியாக இருந்த 1,40,640 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை பெற்றிருந்தோம். தேர்வுக்கான அறிவிப்பு, கொரோனா காலத்திற்கு முன்னர் வெளியானது. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்துவிட்டது. கணினி வழியாக நடக்க இருந்த தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடப்பது தொடர்பான அறிவிப்பை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.