மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் கை கழுவும் அடிப்படை வசதி கூட இல்லை என சிஏஜி ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 மாநிலங்களில் உள்ள 2048 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு மற்றும் சிறுமிகளுக்கென தனி கழிப்பறைகள் இல்லாதது மாணவர்களை பாதிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வச் வித்யாலயா அபியான் (எஸ்.வி.ஏ) திட்டத்தின் கீழ் மத்திய கல்வி அமைச்சகம் அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உதவியை நாடியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 53 பொதுத்துறை நிறுவனங்களால் நாடு முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 997 கழிப்பறைகளை அமைக்கப்பட்டுள்ளன.
கணக்கெடுக்கப்பட்ட கழிப்பறைகளில் 30% கழிப்பறைகள் நீர் பற்றாக்குறை, துப்புரவு ஏற்பாடுகள் இல்லாதது, சேதங்கள் அல்லது கழிவறைகளை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பயன்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட 2,326 கழிப்பறைகளில் 1,679 கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
1,279 கழிப்பறைகளில் கை கழுவும் வசதி இல்லை. 436 பள்ளிகளில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. 535 பள்ளிகளில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை வழங்கும் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.