ஆயிரம் கதைகள் சொல்லும் 'நோக்கியா 3310'-க்கு 20 வயதாம்
நோக்கியா 3310 செல்லிடப்பேசியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது, பயன்பாட்டில் எளிமை, உறுதித் தன்மை என எதையும் மறுக்க முடியாது.
எத்தனையோ ஸ்மார்ட்ஃபோன்கள் வந்தாலும் நோக்கியா 3310 செல்லிடப்பேசி ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த செல்லிடப்பேசியாலும் மாற்ற முடியாது.
அவ்வளவு புகழ்பெற்ற நோக்கிய 3310 செல்லிடப்பேசியை அறிமுகப்படுத்தி சரியாக 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2000-ஆவது ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நோக்கியா 3310 சொல்லிடப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
அடர் நீல நிறத்தில் ஆழ்ந்த பச்சை நிற ஒளியில், அதில் வரும் பாம்பு விளையாட்டும் பலராலும் இன்றும் நினைவில் நிற்கும் தங்களது ஆயிரமாயிரம் பசுமையான விஷயங்களில் ஒன்றாக நினைவு கூரப்படுகிறது.
சற்று மாறுபட்ட வடிவத்தில், கூடுதலாக டார்ச் என்ற ஒற்றை வசதியை இணைத்து 2003-ஆம் ஆண்டு வெளியானது நோக்கியா 1100. அதுவும் செல்லிடப்பேசி விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அந்த செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்திய பலரும், அதனை தூக்கியெறிய மனமில்லாமல் தாங்கள் முதன் முதலாகப் பயன்படுத்திய செல்லிடபேசி என்ற நினைவோடு, பத்திரப்படுத்தும் பொருளாகவும் பல வீடுகளில் இன்றும் அது ஏதோ ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதும் உண்மையே.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.