ஆன்லைனில் நடைபெறும் இறுதி செமஸ்டர் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேமரா மூலம் மாணவர்கள் தெரியும் வகையில் போதிய வெளிச்சத்துடன் கூடிய மூடிய அறையில் அமர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அறையில் வேறு யாரும் இருக்க அனுமதி இல்லை என்றும், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு மாணவர்கள் ஆன்லைனில் Log In செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வின்போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகரக் கூடாது என்றும், பாடப்புத்தகங்களை எடுத்து குறிப்பு எடுக்க அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் முக உணர்ச்சிகள், கண் அசைவுகள் மற்றும் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பம் மூலம் பதிவுசெய்யப்படும் என்றும், மின்சாதன பொருட்கள், மென்பொருள், மின்பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் நேர இழப்புக்கு பல்கலைக்கழகம் பொறுப்பு ஏற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வின்போது புகைப்படம், வீடியோ எடுத்து பகிர்வது, புளூடூத் சாதனங்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள், முறைகேடாக தேர்வு எழுதுவதாக கருதப்படும் என்றும், தேர்வின் போது Mouse-ஐ மட்டும் பயன்படுத்தி கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.