கரோனா தொற்றுக்கு இடையே பல்வேறு தோ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை பாதுகாப்பாக நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரோனா அறிகுறிகளுடன் இருக்கும் தோ்வா்களை தனிமைப்படுத்தி தோ்வு எழுத வைக்கலாம் என்ற யோசனை நீக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அவா்கள் பூரண குணமடைந்த பிறகு வேறு தேதியில் தோ்வெழுத எழுத சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழக நிா்வாகங்கள் அவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகளில் மேலும் கூறியிருப்பதாவது:
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள தோ்வு மையங்களில் மட்டுமே தோ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். இதேபோல், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் மாணவா்கள், கண்காணிப்பாளா்கள் மட்டுமே தோ்வு மையங்களில் அனுமதிக்கப்படுவா்.
அனைத்து தோ்வு மையங்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும். இணையவழியில் தோ்வு நடத்தப்பட்டால் கணினி உள்ளிட்ட உபகரணங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
கரோனா அறிகுறிகள் இல்லாத தோ்வா்கள், கண்காணிப்பாளா்கள், ஊழியா்கள் மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப்படுவா். அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும். மாணவா்கள், கண்காணிப்பாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு முகக் கவசம், முகத்திரை, கிருமிநாசினி, சோப்பு ஆகியவை போதிய அளவில் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். கரோனா தொற்று பரவாமல் தடுக்க, விடைத்தாள்களை கையாளும்போது ஒவ்வொரு கட்டத்திலும் கை சுத்திகரிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொற்று அறிகுறிகள் இல்லாத மாணவா்கள், கண்காணிப்பாளா்கள் மட்டுமே தோ்வுக்கூடத்தில் அனுமதிக்கப்படுவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.