வந்திருப்பது டெங்கு காய்ச்சலா, கொரோனா காய்ச்சலா... அறிகுறிகளால் எளிதில் கண்டுபிடிக்கலாம்!
மழைக்காலத்தில் காய்ச்சல் ஏற்பட என்ன காரணம்?
வைரஸ் கிருமிகளால் சளி, இருமல், காய்ச்சல், கொசுக்கடியால் ஏற்படும் டெங்கு, மலேரியா காய்ச்சல் மற்றும் கிருமிகள் நிறைந்த ஆகாரம் மற்றும் தண்ணீரை அருந்துவதால் மழைக்காலத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
மழைக்காலத்தில் வரும் தொற்றுநோய்களை தடுப்பது எப்படி?
நீரை காய்ச்சியே பருக வேண்டும். அறிமுகம் இல்லாத பகுதிகளில், குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருப்பதால், பணி நிமித்தமாக வெளியே செல்லும் நபர்கள், வாயிலாக, வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
குளிர்காலங்களில் காய்ச்சல், தீவிரமடையாமல் தடுக்க என்ன வழி?
தற்போதைய காலகட்டத்தில் காய்ச்சல் ஏற்பட்டவுடன், சுய வைத்தியம் பார்ப்பது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். தக்க டாக்டரை அணுகி, மருந்துகளை உட்கொள்வதன் வாயிலாக, எளிதாக மீண்டு வரலாம்.
வந்திருப்பது கொரோனா காய்ச்சலா, டெங்கு காய்ச்சலா என எவ்வாறு கண்டுபிடிப்பது?
இரண்டு காய்ச்சலிலும் அதிக உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஆனால், டெங்கு காய்ச்சலில் சளி, இருமல், மூச்சு விடுதலில் சிரமம் பெரிய அளவுக்கு இருக்காது. டெங்கு காய்ச்சலில் தட்டு அணுக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும். கொரோனாவில் ரத்தம் உறைந்து பிரச்னையை ஏற்படுத்தும். டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, உரிய சிகிச்சை மேற்கொண்டால், முழுவதுமாக குணப்படுத்தலாம்.
வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த என்ன வழி?
பொதுவாக வைரசால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்த, சரிவிகித உணவு அவசியம். போதுமான உறக்கம், ஓய்வு வாயிலாக, பொதுவான வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
ரத்த அழுத்தம், தைராய்டு, நீரிழிவு, சிறுநீரக பிரச்னை, இருதய நோய் உள்ளவர்கள் தொற்று ஏற்படாமல், பாதுகாத்துக் கொள்வது எப்படி?
இவர்கள் முன் எச்சரிக்கையுடன் மருந்துகளை உட்கொண்டு, பத்திரமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அவை உடலில் மிகுந்த வீரியத்துடன் செயல்படும். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம். தினசரி நடைப்பயிற்சி, யோகா, உறக்கம், சரிவிகித உணவு உட்கொண்டால், நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.