செரிமான தொந்தரவில் இருந்து விடுபட இஞ்சி மற்றும் கல் உப்பு உதவுகிறது.
பலருக்கும் செரிமான பிரச்சனை பெரிய தொந்தரவாக இருக்கும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் சிலருக்கு உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ள நேரம் இருக்காது. பல மணி நேரங்களாக ஒரே இடத்தில் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் வயதானோருக்கு இந்த பிரச்சனை இருக்கும். இதனால் உங்களுக்கு வயிற்று வலி, தூக்கமின்மை ஏற்படும். இதுமட்டுமல்லாமல் கெட்ட கொழுப்புகள் உடலில் அதிக அளவில் சேர்வதற்கும், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கு செரிமானமின்மை ஒரு காரணமாக அமையும் என ஆயுர்வேதம் கூறுகிறது. அதில் இருந்து விடுபட இந்த எளிய ஆயுர்வேத முறையை பின்பற்றுங்கள். இதன் மூலம் உணவு எளிதில் ஜீரணம் ஆகும்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி- சிறிய துண்டு
கல் உப்பு
எலுமிச்சை சாறு
உட்கொள்ளும் முறை:
உணவு சாப்பிடுவதற்கு முன்பு இஞ்சியை உப்பு மற்றும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து மென்று சாப்பிடுங்கள். எலுமிச்சை சாறு கட்டாயமில்லை. உங்களுக்கு பிடித்தால் அதனை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உணவுகள் எளிதில் ஜீரணம் அடையும்.
மருத்துவ குணங்கள்:
குமட்டலை சரிசெய்ய மற்றும் செரிமானத்தை எளிதாக்க இஞ்சி பயன்படுகிறது. பசி ஏற்படாமல் இருப்பதை தடுக்கவும் இது உதவும். செரிமான தொந்தரவுகள் சரியாகி சரியான நேரத்தில் பசி ஏற்படும்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உப்பு பயன்படுகிறது. உடலின் pH சமநிலையை பராமரிக்கும் பண்பும் இதற்கு உண்டு. உடல் இயக்கங்களை சீராக வைப்பதற்கு உப்பு உதவுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.