தேன் மற்றும் இலவங்கப்பட்டையை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.
உடல் எடையை குறைப்பதற்கு இயற்கையான வழிகளை பின்பற்றினால், பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் இருக்கலாம். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பலருக்கு, உடல் எடையை கவனிப்பதற்கு கூட நேரம் இருக்காது. ஆனால் இதனை சரிவர கவனிக்காவிட்டால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எடையை குறைக்க நினைப்பவர்களுக்கான எளிதான மற்றும் சரியான தீர்வு இலவங்கப்பட்டை. உங்கள் உணவுக்கு சுவை கொடுப்பது மட்டுமல்லாமல், இதில் ஆரோக்கிய பண்புகளும் நிறைந்துள்ளன.
கடந்த காலத்தில் மிகவும் விலைமதிப்புமிக்க பொருட்களில் ஒன்று இலவங்கப்பட்டை. வெள்ளியை விட இதன் விலை அதிகமாக இருந்ததாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு இதன் மருத்துவ குணங்களை பலரும் அறிந்திருந்தனர். நோய்களை எதிர்த்து போராடுவதற்கான சக்தியை கொடுக்கக்கூடியது இலவங்கப்பட்டை. இதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும், உயிரணு சேதத்தை தடுக்கவும் இது பயன்படுகிறது.
மசாலா சூப்கள், காய்கறிகள், இனிப்பு வகைகள் தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துவார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இலவங்கப்பட்டையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அல்லது கிரீன் டீயில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து குடித்து வர உடல் எடை குறையும். இதுமட்டுமல்லாமல் பிளாக் டீ, மூலிகை டீ உள்ளிட்டவைகளிலும் இலவங்கப்பட்டை சேர்த்து அருந்தலாம். இதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.
தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல வியாதிகளை குணப்படுத்த உதவும். இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும். உடலில் உள்ள அதிக அளவிலான கலோரிகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.