தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரகம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. இந்த வளாகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநுால் கழகம், அரசு தேர்வுத் துறை இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தொடக்க கல்வி இயக்குனரகம், பள்ளி இயக்குனரகம், மெட்ரிக் இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டடம், 100 ஆண்டுகள் பழமை யானது என்பதால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, டி.பி.ஐ., வளாகத்தில் காலியாக இருந்த, 1.23 லட்சம் சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில், 40 கோடி ரூபாய் செலவில், ஆறு மாடிகள் உடைய புதிய கட்டடம் கட்டும் பணி, 2018 மார்ச்சில் துவங்கி, 2019 டிசம்பரில் முடிந்தது.ஆனாலும், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கட்டட திறப்பு தள்ளிப்போனது. வரும், 19ம் தேதி புதிய கட்டடத்தை, முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் முறையில், திறந்து வைக்க உள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.