பிரதமரின், தேசிய குழந்தைகள் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீர தீர செயல்புரிந்த, தனித்தகுதி படைத்த குழந்தைகளை, அங்கீகரிக்கும் விதமாக, 'பாலசக்தி புரஷ்கார்' என்ற, குழந்தைகளுக்கான தேசிய விருதுவழங்கப்படுகிறது.இவ்விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ், தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும்.
குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த, தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை, அங்கீகரிக்கும் விதமாக, 'பால கல்யாண் புரஷ்கார்' என்ற, தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
நிறுவனங்களுக்கான விருதுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இவ்விருதுகளுக்கான விதிமுறைகள், மத்திய அரசின், மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின்,www.nca-wcd.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, இவ்விருதுக்கு, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். அதற்கு, வரும் 15ம் தேதி கடைசி நாள்.இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. குடியரசு தினத்திற்கு முந்தைய வாரத்தில், ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.