பொடுகை முற்றிலும் நீக்கும் அற்புத இயற்கை வைத்திய குறிப்புகள்
* ஆரஞ்சு தோல் பவுடருடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் பேக்காக போடுங்கள். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள்.
* கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். முட்களை நீக்கி, தோலை எடுக்கவும். நடுவில் உள்ள ஜெல்லை நன்கு அலசி கொள்ளவும். இதைக் கூழாக்கி, முடி மற்றும் மண்டையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு அலசிவிடுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.
* இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் சிறிது நீர்விட்டு அரைத்து, தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசி வரலாம்.
* கொழுந்து இலைகளாக வேப்பிலையைத் தேர்ந்தெடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஆலிவ் எண்ணெய்யை முடியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். எப்போதும் பயன்படுத்தும் ஷாம்புவை எடுத்து, நன்கு தேய்த்து, மசாஜ் செய்து அலசிவிடுங்கள். மிக்ஸிங் தேங்காய் எண்ணெய் , எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து, மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். பொடுகு நீங்கும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.