அண்ணா பல்கலையின், 'ஆன்லைன்' செமஸ்டர் தேர்வு, நாளை துவங்க உள்ளது. முறைகேடுகளை தடுக்க, சிறப்பு கண்காணிப்பு, 'சாப்ட்வேர்' தயார் செய்யப்பட்டுள்ளது.
லட்சம் மாணவர்கள்
கொரோனா ஊரடங்கால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இறுதி ஆண்டில், கடைசி தேர்வு பாடங்களை தவிர, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், இறுதி ஆண்டின் கடைசி செமஸ்டர் தேர்வையும், 2012 முதல், கடைசி செமஸ்டர் 'அரியர்' பாடங்களுக்கான தேர்வையும், ஆன்லைனில் நடத்த, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை துவங்கும் தேர்வில், ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டி தேர்வு போன்று, கொள்குறி வகையிலான, 'அப்ஜெக்டிவ்' வினாக்கள் கேட்கப்பட உள்ளன.மாணவர்கள் ஒவ்வொரு வினாவுக்கும், அதில் வழங்கப்பட்டுள்ள நான்கு குறிப்புகளில், சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். 'மொபைல் போன், லேப்டாப், டேப்லெட்' என, எதில் வேண்டுமானாலும் தேர்வை எழுதலாம்.
சிறப்பு சாப்ட்வேர்
ஒரு மணி நேர தேர்வை முடிக்கும் வரை, 'கேமரா' வழியாக, தேர்வு நேரம் மற்றும் மாணவர்களின் அசைவுகள் பதிவு செய்யப்படுகின்றன.ஆள்மாறாட்டம் செய்யாமல் இருக்கவும், புத்தகம் அல்லது குறிப்புகளை பார்த்து, 'காப்பி' அடிக்காமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.முறைகேடுகளை தடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு வகையை சேர்ந்த, சிறப்பு சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது.இது, மாணவர்களின் விழி அசைவு மாறினாலும், அவர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்து, பல்கலைக்கு வழங்கி விடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.