தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு செய்திக் குறிப்பு எண் 26 நாள் : 15.09.2020 | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/2019 வெளியிடப்பட்டு முதனிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக இருந்த முதன்மை எழுத்துத் தேர்வு கொரொனா வைரஸ் பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மேற்படி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு , 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.