முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் 110 வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு: வேலூரில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைகழகம் இரண்டாக பிரிக்கப்படும். புதிய பல்கலைகழகம், விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த ஆண்டு முதலே, புதிய பல்கலைகழகம் செயல்படும் எனக்கூறினார்.

இதற்கு திமுக எம்.எல்.ஏ., துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதி கொண்டு வந்ததால், திருவள்ளுவர் பல்கலைகழகத்தை அரசு பிரிக்கிறதா? பல்கலை பிரிக்கப்பட்டால், அதே பெயர் இருக்குமா ? பல்கலைகழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை. ஒன்றும் இல்லாத பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பது சரியல்ல எனக்கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., மாணவர் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் பல்கலை பிரிக்கப்படுகிறது. இதில், அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.